அயன் சூர்யாவுக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஏ7 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக கொடுத்து பிரபல சொகுசு கார் நிறுவனமான ஆடி அசத்தியுள்ளது.
பிரபல சொகுசு கார் நிறுவனங்கள் சினிமா நட்சத்திரங்களுக்கு கார்களை பரிசாக கொடுத்து தங்களது நிறுவனத்தை எளிதாக விளம்பரத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மட்டும் இதுவரை விலையுயர்ந்த கார்களை பரிசளித்து வந்த ஆடி நிறுவனம், தற்போது கொலிவுட் நட்சத்திரம் அயன் சூர்யாவுக்கு ஏ7 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக கொடுத்திருப்பதாக மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
சொகுசுகப்பல்: ஆட்டோ மொபைல் துறையினர், ஆடியின் டாப் வேரியன்ட் ரகங்களில் ஒன்றான ஏ7 ஸ்போர்ட்பேக் பிரிமியம் செடான் காரை சொகுசு கப்பல் என்று அழைக்கின்றனர்.
இந்த காரில், பொருத்தப்பட்டிருக்கும் 3.0 லீற்றர் பெட்ரோல் எஞ்சின் 300 பி.எச்.பி ஆற்றலையும், 3.0 லீற்றர் வி6 டீசல் எஞ்சின் அதிகபட்சம் 245 பி.எச்.பி ஆற்றலையும் வாரி இறைக்கும் திறன் கொண்டது.
பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் ஆடி கார்களுக்கே உரிய தனித்துவமான வடிவமைப்புடன் இருக்கும் ஏ7 உட்புறம் லெதர் இருக்கைகள் அழகூட்டுகிறது. காரின் வேகத்தை பொருத்து கதவுகள் தானாக மூடிக்கொள்ளும் தொழில்நுட்பம் இருக்கிறது.
இதுதவிர, உட்புறம் ஓர் அறையில் உட்கார்ந்திருப்பது போன்ற சுகத்தை தரும் வகையில் விசாலமான இட வசதியை வழங்குகிறது. ஆடி ஏ7 கார் சூர்யாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்டிருப்பதால், இதுவரை அவர் வைத்திருந்த ஆடி க்யூ7 எஸ்யூவியை தனது தம்பி கார்த்தியிடம் கொடுத்து விட்டாராம்.

0 comments: