• சிறந்த வில்லன் தல தான்: விஜய் டிவி



    மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜித்குமாருக்கு சிறந்த வில்லன் விருது கிடைத்துள்ளது.
    திரையுலகில் அஜித்குமார் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற படங்களை விட வில்லனாக நடித்த படங்கள் இன்னும் அவர் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும்.

    அந்த அளவுக்கு அஜித் வில்லனாக நடிப்பதற்கு தோதுவானவர்.
    அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்கள் தக்க எடுத்துக்காட்டாகும்.

    அந்த வகையில் தற்போது மங்காத்தாவும் சேர்ந்திருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா அஜித்திற்கு மற்றொரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

    இதில் அவர் வில்லன் அதாவது நெகடிவ் ரோலில் நடித்திருப்பார். இந்த படத்திற்காக அஜித்குமாருக்கு விஜய் டிவி சிறந்த வில்லன் விருதை வழங்கியுள்ளது.

    மேலும் இதே படத்திற்காக மக்கள் மனம் கவரந்த நாயகன் என்ற  விருதையும் அஜித் தட்டிச் சென்றுள்ளார்.

    தற்போது அஜித் நடித்துள்ள பில்லா-2 திரைப்படமும் அவருக்கு சிறந்த நெகடிவ் ரோலை பெற்றுத் தரும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

0 comments:

Post a Comment