விரைவில் தொடங்கவிருக்கும் அமீர்கானின் தலாஷ் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ரஜினி நடிக்கிறார் என்றும், இதற்காக அவருக்கு ரூ 15 கோடி சம்பளம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், தங்கள்படங்களில் ரஜினி நடிக்கிறார் என்று செய்தி பரப்புவது வழக்கமாகி வருகிறது.
இதற்கு முன் ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் வந்தார் ரஜினி. ஆனால் அது ரஜினிதானா என்று கேட்கும் அளவுக்கு படு செயற்கையாக எடுத்திருந்தனர்.
அடுத்து தூம் 3-ல் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே செய்தி வெளியிட்டுள்ளனர்.
இப்போது அமீர்கான் முறை. தனது தலாஷ் படத்தில் ரஜினியை ஒரு பாடல் காட்சியில் தோன்ற வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.
இந்தக் காட்சியில் ரஜினி மட்டுமல்லாமல், அமிதாப், தர்மேந்திரா உள்பட பாலிவுட் பிரபலங்களும் தோன்றுவார்களாம். கபில்தேவ், சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் கூட இந்த பாடலில் இடம்பெறவிருக்கிறார்களாம்.
பல்வேறு நாடுகளில் உள்ள 50 லொகேஷன்களில், ரூ 50 கோடி செலவில் இந்தப் பாடல் காட்சி படமாகப் போகிறதாம்.
இந்தப் பாடலில் தோன்ற ரஜினிக்கு சம்பளம் ரூ 15 கோடி என செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால், உலகிலேயே ஒரு பாடலில் தோன்ற அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையும் ரஜினிக்கே கிடைக்கும்!
0 comments: