மும்பையைச் சேர்ந்த சினிமா இதழான பிலிம்பேர் ஆண்டுதோறும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களுக்கு விருது வழங்கி வருகிறது.
2011-ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் அறிவிக்கப்பட்டது.
தமிழில் சிறந்த நடிகராக தனுஷ் (படம்: ஆடுகளம்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு நடிகை தீபிகா படுகோன் விருது வழங்கினார்.
தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை அஞ்சலி (படம்: எங்கேயும் எப்போதும்) பெற்றார்.
மற்ற விருதுகள் விவரம் வருமாறு:-
சிறந்த படம்: ஆடுகளம்.
சிறந்த இயக்குனர்: வெற்றிமாறன் (ஆடுகளம்).
சிறந்த துணை நடிகர்: அஜ்மல் (கோ).
சிறந்த துணை நடிகை: அனன்யா (எங்கேயும் எப்போதும்).
சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் (ஆடுகளம்).
சிறந்த பாடகர்: ஆலப்ராஜு (கோ படத்தில் என்னமோ ஏதோ பாடல்).
சிறந்த பாடகி: சின்மயி (வாகை சூடவா படத்தில் சரசர பாடல்).
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (சரசர பாடல்).
சிறந்த புதுமுக நடிகைக்கான விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அவரது தந்தை நடிகர் கமலஹாசன் விருது வழங்கி மகளை விழா மேடையில் வாழ்த்தினார்.
விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் கமலஹாசன், கார்த்தி, விக்ரம், நடிகைகள் குஷ்பு, திரிஷா, ரம்யா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரிச்சா கங்கோபாத்யாய், பூர்ணா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் நடந்தது
.
0 comments: