• 'இரண்டு கதைகள் தயார்... விரைவில் அடுத்த பட அறிவிப்பு' - ஐஸ்வர்யா




    கொலவெறி புகழ் 3 படத்துக்குப் பிறகு, அடுத்த படத்தை இயக்குவதில் மும்முரமாக உள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.
    முதல் படம் 3-ன் பாடல்கள் பெருமளவு ஹிட்டடித்தாலும், அந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பில்லை.
    ஆனால் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது கிடைத்தது. அமெரிக்காவில் பாராட்டு விழாவும் நடந்தது.
    அந்த உற்சாகத்துடன் மீண்டும் படம் இயக்க தயாராகிறார் ஐஸ்வர்யா.
    இந்த முறை அவர் குழந்தைகளுக்கான படத்தை எடுக்கப்போவதாக கூறுகிறார்கள். இன்னொரு படத்துக்கான கதையையும் தயார் செய்துள்ளாராம்.
    இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். ஒன்று பெரிய நடிகர்களை வைத்து எடுக்கபோகிற படத்துக்கானது. இன்னொன்று குழந்தைகளுக்கானது.
    இதில் எந்த படத்தை முதலில் எடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களிடம் பேசி வருகிறோம். இந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.

0 comments:

Post a Comment