• ஓவியாவை ஹீரோயினா போடுங்க: டைரக்டர்களைக் கேட்கும் விமல்




    நடிகர் விமல் தான் நடிக்கும் படங்களில் ஓவியாவை நாயகியாகப் போடுமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.
    நடிகர் விமல், ஓவியா ஜோடியாக நடித்த களவாணி, கலகலப்பு ஆகிய படங்கள் ஹிட்டானது. இதையடுத்து தனது படங்களில் ஓவியா நடித்தால் அது ஹிட்டாகிவிடும் என்று விமல் நம்புகிறார் போலும்.
    அதனால் தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களிடம் தனது படத்தில் ஓவியாவையே நாயகியாகப் போடுமாறு கேட்டுக் கொள்கிறார்.
    இந்நிலையில் எழில் விமலை வைத்து படம் ஒன்றை எடுக்கவிருக்கிறார். அந்த படத்தில் ஓவியாவை கதாநாயகியாக்குமாறு விமல் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஓவியாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் தயாராக இல்லை.
    விமலுக்கு என்ன சென்டிமென்ட்டோ தெரியவில்லை. அது சரி சினிமாவில் ஆளாளுக்கொரு சென்டிமென்ட் வைத்துள்ளார்கள். விமலை மட்டும் சொல்லி என்ன செய்ய.

0 comments:

Post a Comment