
டாப்ஸியால் அடித்துக் கொண்ட இரு நடிகர்களும் எங்கேயிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இது தொடர்பான பரபரப்பும் டக்கென்று அமுங்கிவிட்டது. பெரிய இடத்து சமாச்சாரம். போதும் நிறுத்தி விடலாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அட்வைஸ் போனதாலும் இந்த தகராறு கமுக்கமாகியிருக்கலாம்.
'என்னைக்கு இருந்தாலும் எங்க ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.
மவனே மரியாதையா வாபஸ் வாங்கிரு' என்றும் மகத்துக்கு டார்ச்சர் போனதாக தகவல். முள்ளை முள்ளால எடுக்கிறாங்களோ, கல்லை கல்லால அடிக்கிறாங்களோ, இந்த பிரச்சனையில் மகத் தாக்கப்பட்டது எதனால் என்கிற விஷயம் மட்டும் இப்போது தெள்ளந் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. ஏனாம்?
டாப்ஸியும் மகத்தும் நெருங்கி பழகி வந்த நேரத்தில் டாப்ஸிக்கே தெரியாமல் நிறைய வீடியோ காட்சிகளை எடுத்து வைத்திருந்தாராம் மகத். அதையெல்லாம் யூ ட்யூப்ல போட்டுருவேன் மிரட்டினாராம். இதையெல்லாம் சொல்லி மனோஜிடம் டாப்ஸி அழுததால்தான் இந்த தர்ம அடி விழுந்ததாம்.
ஐயா மகத்து... என்னதான் எக்சாம்ப்பிள் இருந்தாலும் சிம்பு ட்ரீட்மென்ட் சில இடத்துலதான் செல்லும்!
.
0 comments: