• லவ் பண்ணுவாளுக... ஆனா ஒத்துக்க மாட்டாளுக... -அட்டகாசமான அட்டக்கத்தி



    ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே முட்டைக்குள்ளிருப்பது குஞ்சா குளவியா என்பதை ஓரளவுக்கு தீர்மானித்துவிட இயலும். குஞ்சாயிருந்தா என்ன, குளவியா இருந்தா நமக்கென்ன என்கிற அலுப்பை சில படங்கள் கொடுக்கும்.
    ஆனால் வருவதற்கு முன்பே அப்படத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய வைக்கிற ஆர்வத்தை து£ண்டுவது சில படங்கள்தான். அவற்றில் ஒன்றாக இருந்தது அட்டக்கத்தி.

    இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட சில காட்சிகள்தான் இந்தளவுக்கு ஒரு எதிர்பார்ப்பை 'கிரியேட்' செய்திருந்தது திரைப்பட உலகில். அந்த நம்பிக்கையை மேலும் டெவலப் செய்யும் விதத்தில் இன்னொரு நல்ல விஷயம் நடந்தது. படத்தை பருத்திவீரன், நான் மகான் அல்ல போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த ஸ்டுடியே கிரீன் நிறுவனம் வெளியிடப் போகிறது.

    ஸ்டுடியோ கிரீன் வெளியிடப் போகிறதென்றால் அதில் கார்த்தி இல்லாமலா? அட்டக்கத்தி பிரஸ்மீட்டுக்கு அவரே வந்துவிட்டார்.

    'இந்த படத்தை பார்க்கும்போது அப்படியே என்னோட ஸ்கூல் டேஸ் ஞாபகம் வந்துருச்சு. வெளியுலகத்தை கத்துக்கணும் என்பதற்காக அப்பா என்னை பஸ்சில் போக சொல்லுவார். டென்த் படிச்சுட்டு இருந்தேன் அப்போ. ப்ளஸ் டூ பசங்க ஃபுட் போட் அடிக்கறதை அவ்வளவு ரசிச்சு பார்ப்பேன். அவங்கள்ளாம் எனக்கு ஹீரோ மாதிரி தெரிவாங்க. அப்புறம் நான் ப்ளஸ் ஒன் வந்ததும் நானே புட் போட் அடிக்க ட்ரை பண்ணினேன்'.

    வண்டி கிளம்புனதும் ஓடிப்போய் ஏறுவதுதான் ஸ்டைல். பின்னாடியே ஓடிப்போய்அடுத்த ஸ்டாப்பிங்கில்தான் என்னால பஸ்சையே பிடிக்க முடிஞ்சுது. அந்தளவுக்கு நம்ம பாடி ரொம்ப வெயிட். ஒரு நாள் நான் ஃபுட்போட்ல நிக்கும்போது 'மேலே வா மச்சான். உன் இடத்துல பத்து பேரு நிக்கலாம்'னு கிண்டலடிச்சாங்க பசங்க என்று தன்னுடைய இளமைக்கால நினைவுகளுக்குள் மூழ்கினார் கார்த்தி. சென்னையில் படிக்கிற காலேஜ் பசங்க எப்படியெல்லாம் இருக்காங்க என்பதை சொல்கிற படம்தான் இது என்றார் அவர்.

    இப்படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம் வெற்றிமாறன். ஒரு வேளை அதை பார்த்துதான் இந்த படத்தை வாங்கியிருப்பாரு ஞானவேல்ராஜா என்று மேடையில் சிலர் கமெண்ட் அடிக்க, இப்படத்தின் அருமை பெருமைகளை பாண்டிராஜ், ராஜேஷ், வெங்கட்பிரபு போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களும் விளக்கினார்கள்.

    இந்த காலத்து பிகருங்க லவ் பண்ணுவாளுக, ஆனா அதை ஒத்துக்க மாட்டாளுங்க. இந்த படத்தில் அதையெல்லாம் ரொம்ப அசால்ட்டா சொல்லியிருக்காங்க என்று பாண்டிராஜ் பாராட்டியதை கேட்டால், சென்னையின் மொத்த கல்லு£ரிகளும் தியேட்டரில்தான் இருக்கும் போலிருந்தது. இப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவராம்.

    கோடம்பாக்கத்துக்கு அடுத்த குதிரை கிடைச்சாச்சு!
    .

0 comments:

Post a Comment