• கவர்ச்சி உடைக்கு ‘குட் பை’ சொல்லும் ஹன்சிகா




    ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா, அதன்பிறகு கதைக்குத் தேவைப்பட்டால் எந்த மாதிரி உடை அணிந்தும் நடப்பேன் எனக் கூறி வந்தார். இதன்பிறகு இவர் நடித்த ‘எங்கேயும் காதல்’ படத்தில் படம் முழுக்க குட்டைப் பாவடையில் வலம் வந்து ரசிகர்களை கிறங்கடித்தார்.
    இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாலும், அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருவதாலும் இவரது கொள்கையில் தற்போது திருத்தம் செய்துள்ளார்.

    அதன்படி, இனிமேல் அதிகமாக உடம்பை காட்டும் உடைகளை அணிந்து நடிக்க மாட்டேன் என தடாலடியாக நிபந்தனை போட்டு உள்ளார். இவர் தற்போது, ஆர்யாவுடன் நடித்துக் கொண்டிருக்கும் சேட்டை படத்தின் ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியதற்கு, மறுப்பு தெரிவித்துவிட்டாராம் ஹன்சிகா.

    கவர்ச்சியான வேடங்களில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஹன்சிகா மீது இயக்குனர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment