• சிங்கப்பூரில் 10,000 தமிழ் ரசிகர்கள் முன் பிரமாண்டமாக நடந்த மாற்றான் இசை வெளியீடு!



    10000 தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் மாற்றான் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சிங்கப்பூரில் நடந்தது.

    வியாழக்கிழமை நடந்த இந்த விழாவில் தமிழ் சினிமா உலகமே திரண்டுவிட்டது என்றால் மிகையல்ல.


    ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள படம் மாற்றான். சூர்யா - காஜல் அகர்வால் நடித்துள்ளனர். ஒட்டிப் பிறந்த இரட்டையராக சூர்யா நடித்துள்ளார். கே வி ஆனந்த் இயக்கியுள்ளார்.

    இந்த ஆண்டில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய படங்களில் மாற்றானும் ஒன்று.

    படத்தின் அறிமுக விழா சென்னையில் சில வாரங்களுக்கு முன் நடந்தது. இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்தவிருப்பதாக அறிவித்தனர்.

    அதன்படி நேற்று மாலை சிங்கப்பூர் எக்ஸ்போ ஹாலில் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக் கச்சேரியுடன் அமர்க்களப்பட்டது மாற்றான் இசை விழா.

    இசைக் குறுந்தகட்டை இயக்குநர்கள் கவுதம் மேனன், ஹரி, விஜய், லிங்குசாமி வெளியிட, சூர்யா, கேவி ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றுக் கொண்டனர்.

    நடிகர்கள் சிவகுமார், பிரபு, பிரசன்னா - சினேகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பிருந்தா நடன அமைப்பில் தன்ஷிகா, பூர்ணா உள்ளிட்டோர் பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடினர்.

    அஞ்சலா அஞ்சலா பாடலுக்கு மேடையில் திடீரென தோன்றி நடனம் ஆடினார் சூர்யா. அவருடன் கார்த்தி, பிரசன்னா ஆகியோரு இணைந்து ஆடி கலக்கினார்.
    .

0 comments:

Post a Comment