• தமிழ்,தெலுங்கில் வசூல் குவிக்கும் சூர்யா படங்கள்




    சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கும் மாற்றான் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 'கோ' ஹிட் படத்தை எடுத்த கே.பி. ஆனந்த் 'மாற்றான்' படத்தை இயக்குவது இன்னொரு சிறப்பு அம்சமாகும். 
    கடந்த சில வருடங்களாக தமிழ், தெலுங்கில் சூர்யா படங்கள் வசூல் குவித்து வருகின்றன. ஆந்திர வினியோகஸ்தர்கள் சூர்யாவின் படங்களை தெலுங்கில் 'டப்பிங்' செய்து கணிசமான அளவு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

    'மாற்றான்' படம் அனைத்து ஏரியாக்களிலும் பல கோடிகளுக்கு வியாபாரமாகிக் கொண்டு இருக்கிறது. சிங்கப்பூரில் இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை நடத்தியது படத்துக்கு இன்னும் மார்க்கெட்டை ஏற்றி உள்ளது. படங்கள் வசூல் குவிப்பதால், சூர்யாவின் சம்பளம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அடுத்து நடிக்கப் போகும் லிங்குசாமி படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறாராம். அத்துடன் படத்தின் தெலுங்கு உரிமைக்கு மேலும் ரூ.15 கோடி பெறுகிறாராம். இதன் மூலம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் பட்டியலில் சூர்யா சேர்ந்துள்ளார்.
    .

0 comments:

Post a Comment