
மும்பையிலிருந்து சென்னைக்கு இடம் மாறுகிறார் ஹன்சிகா. ‘மாப்பிள்ளை', ‘எங்கேயும் காதல்', ‘ஒரு கல் ஒரு கண்ணாடி', ‘வேலாயுதம்' என வரிசையாக தமிழ் படங்களில் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
தற்போது ‘சிங்கம் 2', ‘வாலு', ‘சேட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: இப்போதைக்கு எனது கவனம் தமிழ் படங்கள் மீதுதான்.
மாதத்தில் 10 நாட்களாவது நான் சென்னையில் தங்க வேண்டி இருக்கிறது.
எனவே இதற்கு ஏற்றார்போல் மும்பையிலிருந்து சென்னைக்கு வீடு மாற்றி விடலாம் என்று முடிவு செய்தேன். எனவே சென்னையில் கடற்கரை ஓரத்தில் வீடு வாங்க முடிவு செய்தேன். ஈசிஆர் பகுதியில் வீடு வாங்கும்படி எனது நண்பர்கள் கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்டேன்.
அடுக்குமாடி குடியிருப்பாக இல்லாமல் தனி வீடு வாங்க முடிவு செய்துள்ளேன். அது கிடைக்காவிட்டால்தான் அடுக்குமாடி குடியிருப்பு பற்றி யோசிப்பேன். எனக்கு வீட்டில் சமைத்த உணவுதான் பிடிக்கும். சென்னையில் இருக்கும்போது அப்படி என்னால் சாப்பிட முடியவில்லை.
சென்னைக்கு வீட்டை மாற்றிக்கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம். முக்கிய காரணம் என்பது நடிப்புக்காகத்தான். நடிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றால் இதுதான் ஒரே வழி. குஷ்பு, ஜோதிகா, சிம்ரன் போன்றவர்களும் இதே காரணத்துக்காக மும்பையிலிருந்து சென்னைக்கு இடம் மாறி இருக்கிறார்கள். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
0 comments: