• நடுங்குற நகுலும் கலக்குற கமலும் ஒண்ணா?



    நகுலை பொறுத்தவரை இதெல்லாம் கனவா, நனவா என்று நாலு செ.மீ ஆழத்திற்கு குழி விழுகிற அளவுக்கு தன்னை கிள்ளியே பார்த்துக் கொள்ளலாம். ஒரு சுமார் ஹீரோவுக்கு அவரையும் விட சுமாராகதான் செலவு செய்வார்கள் படத்தில். தப்பி தவறி இந்த சுமார் லிஸ்ட் ஹீரோக்கள் வரிசையில் மூக்கை நுழைத்துவிட்ட நகுலுக்கு கமல் ரேஞ்சில் ஒரு ட்ரீட்மென்ட் என்றால் எப்படியிருக்கும்?


    ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் 'வல்லினம்' படத்தின் க்ளைமாக்ஸ் சென்னை நேரு ஸ்டேடியத்தில் எடுக்கப்படப் போகிறதாம். இதற்காக கேலரி முழுக்க ஜுனியர் நடிகர்களை திரட்டப் போகிறார்கள். தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டி அவர்களுக்கு சாப்பாடு, சம்பளம் என்று கொடுக்க முன்வந்து விட்டதாம் ஆஸ்கர் நிறுவனம்.

    இது 'வல்லினம்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி. இந்த மூன்று நாள் காட்சிக்காக மட்டும் சுமார் மூன்று கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளதாம். கமலின் 'தசாவதாரம்' படப்பிடிப்பின் போதும் இப்படிதான் இதே கேலரியில் தினமும் பத்தாயிரம் பேரை திரட்டி அவர்களுக்கு பந்தி வைத்தார்கள் ஆஸ்கர் பிலிம்ஸ்சில். மறுபடியும் ரிப்பீட். இந்த முறை நகுலுக்கு.

    நல்லாவே கிள்ளிப் பார்க்கட்டும் நகுல்!
    .

0 comments:

Post a Comment