• ஏமாந்தது ஒரு காலம்... உஷாரான சந்தானம்! .



    ...ந்தா நடந்து போய் டீ சாப்டற தூரத்தில்தான் இருக்கு என்று திண்டிவனம், மதுராந்தகம் தாண்டியெல்லாம் வீட்டுமனையை காட்டுகிறார்கள் அசகாய புரோக்கர்கள்.

    ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து என்ஜின் நிக்கிற தூரம்தான் நம்ம பிளாட்டு, போர் அடிச்சா ரன்வேயிலே இருக்கிற ஃபிளைட் றெக்கையை பிடிச்சுகிட்டு கூட தொங்கலாம் நீங்க.
    அந்தளவுக்கு பக்கத்துலதான் நம்ம பிளாட் அமைஞ்சுருக்கு என்றெல்லாம் முகத்துக்கு நேரே சாம்பிராணியை போட்டு சந்தனத்தை தடவுகிற இந்த புரோக்கர் பெருமக்களிடம்தான் ஒரு காலத்தில் ஏமாந்து போனார் சந்தானம்.

    வளசரவாக்கத்தில் இருக்கும் ஒரு நிலத்திற்கு பணத்தை கொடுத்து ஏமாந்து பிறகு அதை வாங்க படாத பாடுபட்டார் என்பதெல்லாம் சந்தானம் வரலாற்றில் சக்தி இழந்த பக்கங்கள்!

    இப்போது எல்லாமே தலைகீழ். இவரே ஐம்பது குடியிருப்புகள் கொண்ட ஒரு பிளாட் கட்டப் போகிறாராம். அத்தனையும் வாடகைக்குதான். நாட் ஃபார் சேல்! சென்னையின் மையப் பகுதியிலேயே அமையப் போகிறது இந்த பிளாட்.

    சினிமாவில் சம்பாதித்து நட்சத்திர ஓட்டல்களின் பார்களில் அத்தனையையும் தொலைத்த சில நகைச்சுவை முன்னோடிகள் கற்றுக் கொடுத்த பாடம்தான் சந்தானத்தின் இந்த உஷாருக்கு காரணமாம்!

0 comments:

Post a Comment