• கையில் காதல் டாட்டூ..!ரகசியம் சொல்லும் கமல் மகள்




    காதலின் சின்னமான ரோஜா மலரை கையில் டாட்டூவாக வரைந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். பிரபு தேவா பெயரை தனது கையில் டாட்டூவாக போட்டுக்கொண்டார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து பாலிவுட் காதலன் பிரதீக் பெயரை ‘மதராசபட்டினம் ஹீரோயின் எமி ஜாக்ஸன் பச்சை குத்திக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி னார்.

    இந்நிலையில் ஸ்ருதி ஹாசனும் காதலின் சின்னமான ரோஜா மலரை கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார். டோலிவுட்டில் அவர் நடித்த ‘கப்பர் சிங் படம் ஹிட்டானதை தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

    இது பற்றி ஸ்ருதி ஹாசன் கூறியதாவது:

    மக்களுக்கு பயனுள்ள பொருட்கள் பற்றிய விளம்பரங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஒரு பெண் என்ற முறையில் நானும் நிறைய சேலை வாங்குவேன். அதனால்தான் சேலை மற்றும் நகை விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறேன். ஏனென்றால் ஒரு பொருள் பற்றிய விளம்பரத்தில் நடிக்கும்போது அந்த பொருள் வாங்க நினைக்கும் மக்களுக்கு பிரபலங்கள் நடிக்கும் பொருட்கள்தான் முதல் சாய்ஸாக இருக்கும்.

    என் கையில் ரோஜா டாட்டூ வரைந்திருப்பது பற்றி கேட்கிறார்கள். எனக்கு ரோஜா பூ ரொம்ப பிடிக்கும். பெண்மையை குறிக்கும் பூ என்பதால் அதை வரைந்தேன். மற்றபடி காதலின் அடையாளமாக இதை வரையவில்லை. இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கிறேன். அவரை நீண்ட நாட்களாக எனக்கு தெரியும். புதிய பட குழுவினருடன் இப்படத்தில் பணியாற்றுகிறேன்.
    .

0 comments:

Post a Comment