
அசின் வசிக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியேறினார் பிரபு தேவா. கிட்டத்தட்ட தமிழுக்கு முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட் படங்களில் நடிக்க கடந்த 3 வருடத்துக்கு முன்பு மும்பை பறந்தார் அசின். ஆமிர்கான், சல்மான் கான் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இதையடுத்து நிரந்தரமாக மும்பையில் தங்க முடிவு செய்தார். இதையடுத்து லோகஹன்வாலா பகுதியில் உள்ள நவீனமயமான குடியிருப்பில் வீடு வாங்கி தங்கினார். அவருடன் அவரது தந்தையும் தங்கி இருக்கிறார். காதல் கிசுகிசுக்களில் சிக்கனாலும் அசின் பாலிவுட்டில் காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பது அங்கிருக்கும் ஹீரோயின்களுக்கு புரியாத புதிராக இருக்கிறதாம்.
இந்நிலையில் பிரபுதேவாவும் இந்தி படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘ரவுடி ரத்தோர்Õ படம் சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இந்தியில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் புது படம¢ இயக்குகிறார். இதற்கான பணியில் மும்முரமாக இருந்த அவர் மும்பையில் தங்குவதற்கு வீடு தேடி வந்தார். அசின் வசிக்கும் குடியிருப்பில் வீடு இருப்பதை கேள்விப்பட்டு அங்கு சென்று பார்த்தார். பிடித்திருந்ததையடுத்து அசின் வீட்டு பக்கத்து வீட்டில் அவர் குடியேறிவிட்டார்.
வீடும், அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளையும் தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாக நண்பர்களிடம் கூறி சந்தோஷப்பட்டார் பிரபு தேவா. டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கும் பிரபுதேவா தனது படத்தில் அசினை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். அருகருகே குடியிருப்பதால் இவர்கள் சந்தித்து பேசுவதற்கு சிரமம் இருக்காது. அச¤ன்தான் பிரபுதேவாவிடம் சென்று சான்ஸ் கேட்டதாகவும் பாலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
0 comments: