• சமந்தா வந்தார் சந்தோஷம் வந்ததா?




    நோய் அவருக்கு. நோக்காடு நமக்கா' என்று அலறிக் கொண்டிருக்கிறது சில தயாரிப்பு நிறுவனங்கள். எல்லாம் சமந்தாவின் ரீ என்ட்ரியால்தான். திடீர் அரிப்பு நோயால் அவதிப்பட்ட சமந்தா சட்டென்று பெட் ரெஸ்ட்டுக்கு போக, சுமார் 200 கோடி ரூபாய் முடங்கும் அபாயம் ஏற்பட்டுவிட்டது தமிழ், தெலுங்கு, இந்திப்பட ஏரியாக்களில். இவர் நடித்து பாதியில் நிற்கிற படத் தயாரிப்பாளர்கள் எல்லாரும் சமந்தா வந்தால் பிழைத்தோம். இல்லையேல் அம்புட்டும் கோவிந்தாதான் என்கிற நிலைமைக்கு ஆளானார்கள்.

    நல்லவேளையாக ராப்பகலாக பாடுபட்டு சமந்தாவை கரை தேற்றிவிட்டது மருத்துவம். வீட்டிலிருந்து வெளியில் வந்தாலும், படப்பிடிப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எதையெல்லாம் உண்ண வேண்டும். எத்தனை டிகிரி வெப்பத்தை தாங்க வேண்டும் என்றெல்லாம் பாடம் எடுத்து அனுப்பியிருக்கிறார்களாம்.

    எல்லாவற்றையும் விட உள்ளூர் அழகு கிரீம்களை அண்டவே கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்களாம். இதனால் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்படும் க்ரீம்களையே பயன்படுத்துகிறார் சமந்தா. இதற்கான பில் மட்டும் வழக்கம் போல தயாரிப்பாளர்களுக்கு பாஸ் செய்யப்படுவதால், ஆங்காங்கே அலுப்பு!

    200 கோடி சாமீ... இதுக்கெல்லாம் அசந்தா முடியுமா?

0 comments:

Post a Comment