
மைலாப்பூரில் இடி இடித்தால் மதுரையில் விரிசல் விழுமா? இந்த தகவலை கேட்டால் விழும் என்றுதான் சொல்லத் தோன்றும். சீமான் படத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டதும், பின்பு வேண்டாம் என்று விலகியதும் ஏன் என்ற மர்மம் இப்போதும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
உண்மை காரணம் நடிகை அசின்தானாம். 'காவலன்' படத்தில் அசின் நடித்திருந்தார் அல்லவா? இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில்தான் அவர் இலங்கைக்கு சென்று திரும்பியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் அமைப்புகள், 'காவலன்' படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு முன் போராட்டம் நடத்த முடிவெடுத்திருந்தார்கள். இப்படத்தின் அயல்நாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கவும் தயக்கம் இருந்ததாம் பலருக்கு.
இதையெல்லாம் சமாளிக்கதான் சீமானுக்கு படம் தரப்போவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டதாம் விஜய் தரப்பிலிருந்து. அவர்கள் நினைத்தபடியே தமிழ் அமைப்புகள் சைலண்ட் ஆகிவிட்டன. படமும் ரிலீஸ் ஆகி கலெக்ஷனும் முடிந்தது. அப்புறம் எதற்கு சீமான்? திட்டப்படியே அவரை கைகழுவினார்கள் விஜய் தரப்பினர்.
சினிமாவுக்கு மட்டும் திரைக்கதை எழுதப்படுவதில்லை. அதை ரிலீஸ் செய்வதற்கு கூட தனியாக ஒருமுறை எழுதுவார்கள் போலிருக்கிறது.
0 comments: