• சிவா பூஜையில் கரடி..!சிவாவின் தர்மசங்கடம்..' .



    மிர்சி சிவாவின் கிராப் கலகலப்பு படத்துக்கு பிறகு எகிறிவிட்டது. தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திவிட்டார். இந்த நிலையில் கலகலப்புக்கு முன்பு வீட்டில் சும்மா இருந்தபோது சில படங்களில் நடித்தார்.


    அதில் ஒன்று சிவா பூஜையில் கரடி. இப்போது அந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாகிறது. இந்தப் படம் வந்தால் தன் இமேஜ் கெட்டு விடும் என்று நினைக்கிறார் சிவா. இதனால் படத்துக்கு டப்பிங் பேசாமல் இழுத்தடித்து வருகிறாராம்.

    அதனால் தயாரிப்பாளர் கொதித்து போய் இருக்கிறாராம். பேசியபடி சம்பளம் தரவில்லை. அதனால் டப்பிங் பேசவில்லை என்று சிவா கூறினாலும் அவரின் தயக்கத்துக்கு காரணம் இமேஜ்தானாம்.
    .

0 comments:

Post a Comment