
சிம்பு நடிப்பில் வெளிவர இருக்கும் ' வேட்டை மன்னன் ' படத்தில் தீக்ஷா சேத்தும், ஹன்சிகாவும் நடித்து வருகிறார்கள். ஆனால் இருவரும் அளித்து இருக்கும் பேட்டி படத்திற்கு பெரும் தலைவலியாக அமைந்து இருக்கிறது.
தீக்ஷா சேத் அளித்துள்ள பேட்டியில் "படத்தில் ஹன்சிகாவுக்கு கேங்ஸ்டர் கேரக்டர். நான்தான் சிம்புவோட காதலி. யார் ஹீரோயின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க " என்று தெரிவித்து இருக்கிறார்.
ஹன்சிகாவோ " நான்தான் படத்தின் நாயகி. 'வேட்டை மன்னன்' படத்தின் கதை என் கேரக்டர் மேலதான் பயணிக்கும். தீக்ஷா சேத் சிம்புவின் காதலியாக வந்துட்டு போவார் " என்று தெரிவித்து இருக்கிறார்.
சிம்பு தற்போது ' போடா போடி ', ' வாலு ' ஆகிய படங்களை முடித்து விட்டு தான் ' வேட்டை மன்னன் ' படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். அதற்குள் நாயகிகள் இப்படி அளித்துள்ள பேட்டிகள் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.
"நடிப்புல போட்டி போட்டா பரவால்ல.. பேட்டி குடுக்கறதுல போட்டி போடறாங்களே " என்கிறது கோலிவுட் வட்டம்.
0 comments: