
துப்பாக்கி பெயரை பயன்படுத்தலாமா கூடாதா என்று நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு சொல்லவில்லை. திரையுலக வரலாற்றில் முதல்முறையாக தலைப்புப் பிரச்சனை விசாரணை ஆறாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி படத்தின் விளம்பரத்தை பாதித்தாலும் பிசினஸை கொஞ்சமும் பாதிக்கவில்லை.
விஜய் படத்தை வாங்க ஆந்திர, கேரள விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். முதலாவதாக படத்தின் தெலுங்கு உரிமை தயாரிப்பாளர் தாணு ஆனந்தப்படும் அளவுக்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. பிரபல விநியோகஸ்தர் ஷோபா ராணி ஏறக்குறைய 15 கோடிக்கு தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார்.
கேரளாவைப் பொறுத்தவரை ரஜினி, கமலைவிட விஜய்க்குதான் மார்க்கெட்டும், ரசிகர்களும் அதிகம். அவரின் டப்பாப் படங்களே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. துப்பாக்கி முருகதாஸ் இயக்கியிருக்கும் படம். இதுவரை விஜய் நடித்தப் படங்களுக்கு தராத பெரும்தொகை தர விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் மற்றுமொரு கேரள சாதனையை படைக்கவிருக்கிறது துப்பாக்கி.
.
0 comments: