• ஆறிய பால் அமலா பால்! சூடேற்றுகிறது சுச்சுவேஷன் .




    ஆறிய பால் ஆகிவிட்டார் அமலாபால். எதுவும் இல்லை நிரந்தரம், எதற்கடா இந்த அவசரம் என்று நினைத்திருப்பார் போல. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 'நிமிர்ந்து நில்' படத்தில் அப்படியொரு பவ்யம், ஈடுபாடு காட்டிக் கொண்டிருக்கிறாராம்.

    'தெய்வத்திருமகள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது விக்ரமின் முழு ஆசிர்வாதமும் இருந்தது அமலாவுக்கு. படம் முடியும்போது பால் திரிய ஆரம்பித்தது.
    அப்புறம் தனது அடுத்தடுத்த படங்களுக்கு வேறு நடிகைகளை சிபாரிசு செய்ய ஆரம்பித்தார் அவர். அதற்கேற்ப அமலாவின் சில படங்கள் வழுக்கலாகிவிட, மலையாள பகவதியே கதி என்று கேரளாவுக்கே ஓடிப் போனார் அமலா.

    அதற்கப்புறம் கிடைத்த வாய்ப்புதான் இது. படத்தின் டைரக்டர் சமுத்திரக்கனி டயலாக் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே இவர் முந்திக் கொண்டு இப்படி பேசவா, அப்படி சொல்லவா என்று ஆர்வம் காட்டுவதால் கனி இன்னும் இன்னும் பழமாகிக் கொண்டிருக்கிறாராம். இப்படி ஒரு ஆர்வமான நடிகையை நான் பார்த்ததே இல்லை என்று வருகிற போகிற நிருபர்களிடம் எல்லாம் அளக்க ஆரம்பித்திருக்கிறார் கனி.

    பார்த்து சார்... பொண்ணு ஜுஸ் புழிஞ்சுரப்போவுது?

0 comments:

Post a Comment