
இதுவரை விஜய் நடித்த எந்தப் படத்தின் தலைப்புக்கும் துப்பாக்கி அளவுக்கு சிக்கல் வந்ததில்லை.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் இந்தப் படம் இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் கள்ள துப்பாக்கி படத்தினருடன் டைட்டில் பிரச்சினை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறது.
செப்டம்பர் 10-ஆம் தேதியன்று வழக்கு விசாரனைக்கு வரும் போது எப்படியும் இந்த வழக்கை முடித்துவிட்டு இந்த மாதமே படத்தின் பாடல்களை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் கலைப்புலி தாணு தீவிரமாக உள்ளார்.
இந்த மாதம் இறுதி வாரத்தில் அநேகமாக இசை வெளியீடு இருக்கும் என படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த முறை வழக்கு முடியாது என்று தெரிந்தால், படத்தின் டிசைனை மாற்றி, தலைப்பில் கூடுதல் மாற்றங்கள் செய்யவும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் துப்பாக்கி படத்தின் கர்நாடக விநியோக உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளார் ஸ்ரீகாந்த் என்ற விநியோகஸ்தர்.
0 comments: