
முத்தக் காட்சியில் நடிப்பது தவறில்லை என்று முன்னணி நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தற்போது முன்னணி இயக்குனர்களில் கைகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல்.
தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படங்களில் நடிக்கும் காஜலின் புகழ் பாலிவுட்டிலும் பரவியுள்ளது.
ஏனெனில் பாலிவுட்டில் உதட்டு முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து காஜல் அகர்வால், பாலிவுட்டை பொறுத்தவரை உதட்டு முத்தக் காட்சி என்பது சாதாரண விடயமாகும்.
படத்திற்கான காட்சி அமைப்பிற்கு அவசியம் என இயக்குனர் என்னிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் முத்தக் காட்சியில் நடித்துக்கொடுத்தேன் என காஜல் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஆபாசமாக நடிக்க அழைப்பு வந்தால் எந்த மொழிப்படமாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என ஆவேசமாக கூறியிருக்கிறார்.
0 comments: