
கடந்த 15 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா இப்போது தமிழ்த் திரையுலக முன்னணி ஹீரோக்களில் ஒருவர். சூர்யாவா? அவரைத் தான் தினமும் விளம்பரங்களில் பார்க்கிறோமே என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல விளம்பரங்களில் நடிப்பவர். ரசிகர்களின் கண்ணில் அவ்வப்போது தென்படாமல் இருந்தால் நம் படம் வெளிவரும் போது நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்க்கவே ரசிகர்கள் பெருமளவில் வருவார்கள் என்பது நடிகர்களிடையே காலந்தொட்டு இருந்துவரும் ஒரு எண்ணம்.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் பல விளம்பரங்கள் நடித்துவரும் சூர்யா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத்தரும் அகரம் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தையும் தன் மனைவி, விஜய் உள்ளிட்ட சில நட்சத்திரங்களுடன் இணைந்து நடத்திவருகிறார். அதோடு தன்னிடம் உதவி கேட்டு வரும் வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் தன்னால் ஆன உதவியை செய்கிறார்.
முன்னணி நடிகரான சூர்யாவிடம், எதற்கு இத்தனை விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என கேட்ட போது, ’’நான் என் ரசிகர்களுக்கு பரிச்சயமானவன் தான். அவர்கள் வீட்டில் ஒருவனாக இருக்கவே விருப்பப்படுகிறேன். நான் படங்களில் நடித்து சம்பாதிப்பது என் குடும்பத்திற்காக. ஆனால் நான் விளம்பரப்படங்களில் நடித்து சம்பாதிக்கும் ஓவ்வொரு பைசாவையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், ஆசிரமங்களுக்கும் கொடுகிறேன்’’ என கூறினார்.
0 comments: