
`சினிமாவில் இப்போது யதார்த்தமான கதாநாயகர்களே ஜெயிக்கிறார்கள். என் மகன் விஜய் கூட, `அழகன்' அல்ல'' என்று டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.
பீனிக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்துள்ள புதிய படம், `மதில் மேல் பூனை.' இதில், விஜய் வசந்த் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
பரணி ஜெயபால் டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
``சினிமாவில் இப்போது யதார்த்தமாக இருக்கும் கதாநாயகர்களே ஜெயிக்கிறார்கள். முன்பெல்லாம் கதாநாயகன் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இப்போது அப்படி இல்லை. பக்கத்து வீட்டுப் பையனை பார்த்தால் எப்படி இருப்பாரோ, அப்படி இருக்க வேண்டும்.
என் மகன் விஜய் கூட அழகான நடிகர் அல்ல. யதார்த்தமாக இருப்பார். கதாநாயகன் என்றால், அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று இப்போதைய ரசிகர்கள் நினைக்கிறார்கள். ரொம்ப அழகாக இருந்தாலும் தப்பு. இப்போது வரும் கதாநாயகர்களுக்கு இதுதான் பலம். விஜய் வசந்தும் யதார்த்தமாக இருக்கிறார்.''
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.
0 comments: