• மார்ச் 2 முதல் இங்கிலாந்தில் கோச்சடையான் ஷூட்டிங்


    வரும் மார்ச் 2ம் தேதி முதல் இங்கிலாந்தில் ‘கோச்சடையான்’ ஷூட்டிங் நடக்கிறது என்றார் சவுந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா தம்பதிக்கு நேற்று 31வது ஆண்டு திருமண விழா.
    போயஸ்கார்டன் வீட்டில் எளிமையான கொண்டாட்டத்துடன் விழா நடந்தது. நெருக்கமான நண்பர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து கூறினார்கள். ஐஸ்வர்யா தனது குழந்தைகளுடன் நேரில் சென்று பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். இதுபற்றி டுவிட்டரில் ஐஸ்வர்யா கூறும்போது,‘‘ஞாயிறு மாலை அப்பா, அம்மாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். 31 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து அசத்தி உள்ளனர். இருவரையும் நான் மனமாரா விரும்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment