• இந்திக்காக தமிழ் வாய்ப்பை இழக்க மாட்டேன்

    இந்திப்பட வாய்ப்புக்காக, தமிழ் படங்களை இழக்க மாட்டேன் என்று சமந்தா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழ்தான் என்னை அறிமுகப்படுத்தியது.
    ஆனால் வாழ்க்கை கொடுத்தது தெலுங்கு. எனவே இரண்டும் எனக்கு இரு கண்கள் மாதிரி. மணிரத்தினம், கவுதம் மேனன் என்று  நான் உயர்வாக மதிக்கும் இயக்குனர்கள் படத்தில் இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று நினைக்கவில்லை.இடையில் இரண்டு இந்திப்பட வாய்ப்புகள் வந்தது. தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் கால்ஷீட் கேட்டார்கள். கொடுத்தால் ஒரு தமிழ் படத்தையும், ஒரு தெலுங்கு படத்தையும் இழக்க வேண்டியது வரும். அதனால் மறுத்து விட்டேன். இந்தி வாய்ப்பை விட தமிழ், தெலுங்கில் முக்கியமான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே  ஆசை. தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போன்று தமிழிலும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு. அதுவும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

0 comments:

Post a Comment