• 'மச்சான்'ஸுக்கு புது அர்த்தம் சொல்லும் நமீதா!



    நடிகை நமீதாவுக்கு பிடித்த தமிழ் வார்த்தை மச்சான்ஸ் என்கிற 5 எழுத்து தான். அதற்கு நட்பு என்று அவர் அகராதியில் அர்த்தமாம்.

    நடிகை நமீதா எந்த விழாக்களுக்கு வந்தாலும் சரி, உடனே கூட்டத்தைப் பார்த்து ஹாய் மச்சான்ஸ் என்று கொஞ்சும் தமிழி்ல சொல்லி, ரசிகர்களை நோக்கி ஒரு பறக்கும் முத்தம் கொடுப்பார். உடனே கூட்டத்தில் பயங்கர விசில் மற்றும் கைத்தட்டல் ச்ததம் கண்டிப்பாக கேட்கும்.


    அந்த முத்தத்தைப் பிடிக்க ரசிகர்கள் முந்தியடிப்பார்கள். எப்பொழுதுமே ரசிகர்களை மச்சான்ஸ் என்றே இனிக்க, இனிக்க அழைப்பார். இப்படித் தான் அம்புலி பாடல் வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஹாய் மச்சான்ஸ் என்று அழைத்து பறக்கும் முத்தம் கொடுக்க அது அதே மேடையில் இருந்த இயக்குனர் சேரனை கடுப்பாகிவிட்டது.

    "என்ன இந்தப் பொண்ணு இப்படி பேசிட்டுப் போகுது... ரசிகர்களை மச்சான்கள் என்கிறார். அதை கேட்டு எல்லோரும் கை தட்டி விசில் அடிக்கிறீர்கள். பொதுமேடையில் அவர் இது போல் பேசி இருக்கிறார். இது சரிதானா? நம்ம வீட்டு பொண்ணுங்க இதுபோல் மேடையில் நின்னு கிஸ் கொடுத்தாலோ மச்சான்கள் என்றாலோ ரசிப்போமா... மக்கள் மனசு மாறிப் போச்சு," என்று சேரன் பொறிந்து தள்ளினார்.

    சரி, மேட்டருக்கு வருவோம். எனக்கு கொஞ்சம், கொஞ்சம் தமிழ் தெரியும் என்று கூறும் நமீதாவுக்கு தமிழில் பிடித்த வார்த்தையே அந்த மச்சான்ஸ் தான். சரி வாய் நிறைய மச்சான்ஸ் என்கிறீர்களே, அதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் நட்பு என்கிறார்.

0 comments:

Post a Comment