தமிழில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடிகர் சூர்யா இன்று (27-02-12) நடத்துகிறார்.
உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குரோர்பதி’ யை, ஹிந்தியில் பாலிவுட்டில் பிரபலமான அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார்.
இதை தொடர்ந்து தமிழில் ஸ்டார் விஜய் டிவி, முதன் முறையாக தொகுத்து வழங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை பிரபல நட்சத்திரம் சூர்யா இன்று முதல் ‘1கோடி’ பெயரில் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி இன்றிரவு 8 மணியளவில் ஒளிப்பரப்பாக உள்ளது. இதன் மூலம் சூர்யா சின்னத் திரையிலும் கால் பதிக்கிறார்.
இன்று மிகப் பிரமாண்டமாய் தொடங்க இருக்கும் சூர்யாவின் “1கோடி” நிகழ்ச்சி, மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளித்திரையில் பார்த்த நடிகர் சூர்யாவை, இன்று முதல் சின்னத் திரையில் காண மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
0 comments: