• ராகவா லாரன்ஸின் முனி-3 ஆரம்பம்!



    நடிகர் ரஜினியின் தீவிர ரசகரான ராகவா லாரன்ஸ் முனி – 3 படத்தை விரைவில் ஆரம்பிக்கப் போவாதாக கூறினார்.

    ராகவா லாரன்ஸ் தான் இயக்கி, நடித்த முனி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து, 2-ம் பாகமான காஞ்சனா படம் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீலிஸாகி மாபெரும் வெற்றியடைந்தது.
    இந்த வெற்றி மூலம் லாரன்ஸிற்கு, கார் ஒன்று பரிசாக கிடைத்தது. இந்த பரிசை தெலுங்கு பட தயாரிப்பாளர் ’பெல்லம் கொண்ட சுரேஷ்’ வழங்கினார். தற்போது லாரன்ஸ் முனியின் மூன்றாம் பாகமான முனி – 3 யை இயக்கவுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது :

    ” முனி – 3 ஆம் பாகத்தின் ஷீட்டிங்கை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளேன். படத்திற்கு இன்னும் டைட்டிலை முடிவு செய்யவில்லை. இந்த படத்தில் என் தம்பி வினோவை அறிமுகம் செய்யவுள்ளேன். அவரும், நானும் சேர்ந்து ஆடும் நடனக்காட்சி படத்திற்கு பக்க பலமாக இருக்கும்” என்று கூறினார்.

    மேலும், இப்படத்தையும் ராகவா லாரன்ஸே இயக்கி, நடிக்கவும் உள்ளார். தெலுங்கில் “ரபேல்” படத்தை இயக்கி, இசையமைத்து வரும் லாரன்ஸ் ஜீன் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கிறார். இதன் பிறகு முனி – 3 ஆரம்பிப்பார் என தெரிகிறது.

0 comments:

Post a Comment