• ஆப்ரிக்காவில் படமாக்கப்பட உள்ள சிங்கம் 2



    கொலிவுட்டில் “சிங்கம் 2” படப்பிடிப்புகளை ஆப்ரிக்காவில் நடத்த இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளார்.


    கொலிவுட்டில் ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யா சிங்கம் 2ல் இணைகிறார்.

    சூர்யா, அனுஷ்கா, விவேக் நடிப்பில் வெளியான சிங்கம் தமிழில் வெற்றியடைந்ததை அடுத்து, ஹிந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆனது.

    தற்போது மீண்டும் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை ஹரி தயார் செய்து வருகிறார்.

    இதுவரை கிராமங்களில் படப்பிடிப்புகளை நடத்தி வந்த ஹரி, முதன்முறையாக 'சிங்கம் 2' படத்திற்காக பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகளை தென் ஆப்பிரிக்கா மற்றும் நைஜிரியா உள்ளிட்ட நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

    சிங்கம் 2 நாயகன் சூர்யாவிற்கு நல்ல மதிப்பை தரும் என்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

0 comments:

Post a Comment