காமெடி நடிகர்கள் கருணாஸ் மற்றும் கோவை சரளாவும் இணைந்து ”ரகளைபுரம்” என்ற படத்தின் மூலம் காமெடி ரகளை செய்ய வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களோடு ஒப்பிடும் போது, காமெடி நடிகைகள் குறைவாகவே உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் கோவை சரளா. இவர் சாதாரணமாக பேசினாலே ரகளையாக இருக்கும். தற்போது இவர் ”ரகளைபுரம்” என்ற படத்தின் மூலம் நம்மை கலகலக்க(கலாய்க்க) வருகிறார். இந்த படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
மேலும், இந்த படத்தின் கதாநாயகனாக காமெடி நடிகர் கருணாஸ் நடிக்கிறார். முதன் முதலாக கருணாஸ் மற்றும் கோவை சரளா இணைந்து நடிக்கும் இந்த படம் காமெடி கதையோடு எடுக்கப்படுகிறது. ஏற்கனவே கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட படத்தில் அவரின் நடிப்பு மக்களை மிகவும் கவர்ந்தது. இதை தொடர்ந்து கருணாஸ் ”சந்தா மாமா” என்ற மற்றொரு படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
ஆனால் இப்படத்தின் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை சிரிக்கவைப்பதற்கென்றே உருவாகிறது என்று படத்தின் இயக்குனர் மனோகர் கூறுகிறார்.
0 comments: