நடிகை ‘ஸ்ருதி ஹாசன்’ ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தமிழில் வெளியாகவிருக்கும் ”3” படத்தின் 'கண்ணழகா..’ என்ற பாடலை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
அந்த பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளதா க கூறுகிறார் ஸ்ருதி. மேலும், சமீபத்தில் தான் பாடலின் 'ரெக்கார்டிங்' முழுவதும் முடிவடைந்ததுள்ளதாக கூறுகிறார்.
இதை தொடர்ந்து படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷ் ”3” படத்தினை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார். இதற்கான வேலைகளில் அவர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டப்பிங் வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கிறது. படம் மார்ச் 30 அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியிடப் போவதாக தெரிகிறது. மொத்தத்தில் ”3” படம் 3 மொழிகளில் வெளியிடப்படுகிறது
படம் ரீலீஸாவதற்கு முன்பாகவே ”ஒய் திஸ் கொலைவெறி..” பாடல் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா படத்தை மட்டுமல்லாமல், பாடல்களையும் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரெகார்டிங் செய்யப்போகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments: