• அஜித்தின் வரலாற்றில் பூமிகா!



    தமிழில் அஜித் மற்றும் அசின் நடித்து ஹிட்டான “வரலாறு” படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் நடிகை பூமிகா நடிக்கிறார்.


    அஜித்தின் ‘வரலாறு’ படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்குகிறார். படத்திற்கு ”காட்பாதர்” என்று பெயரிட்டுள்ளனர். நடிகை பூமிகா இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் கே. மஞ்சு கூறினார். இது குறித்து தயாரிப்பாளர் கே.மஞ்சு கூறியதாவது :

    “பூமிகாவை இந்த கன்னட படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் தேதிகள் வழங்க முடியவில்லை. எனவே சின்ன கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்துள்ளார். கோவாவில் நடந்த படப்பிடிப்பில் உபேந்திரா அறிமுகமாகும் பாடல் காட்சியில் பூமிகா நடித்திருக்கிறார்” என்று கூறினார்.

    இப்படத்தில் அஜித் வேடத்தில் உபேந்திரா நடிக்கிறார். மேலும், ஜெயமாலாவின் மகள் சௌந்தர்யா, கேதரின் தெரசா உட்பட பலர் நடிக்கின்றனர். ’ஆஸ்கார் நாயகன்’ ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்

0 comments:

Post a Comment