• தனுஷின் ‘3’ படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்படுமா...?



    சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதி இணைந்து நடிக்கும் படம் '3'. தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் அடுத்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது.
    இதில் தனுஷ் பாடிய கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதை அடுத்து, '3' படம் ரசிகர்களிடையேயும், மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் இப்படம் ரஜினிக்கு மட்டும் பிரத்யாகமாக திரையிட்டு காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினி ”இந்த படம் மற்றும் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும், தனுஷ் மற்றும் சுருதியின் நடிப்பு மிகவும் கவர்ந்ததாகவும், இந்த படத்தில் ஐஸ்வர்யா தன்னை ஒரு திறமையான இயக்குனராக காட்டியுள்ளார்” என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும் படத்தின் முடிவு சோகமாக இருப்பதாகவும், அதனை மகிழ்ச்சியாக மாற்றும்படி அறிவுரை வழங்கினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தனுசும், ஐஸ்வர்யாவும் படத்தின் கிளைமாக்சை மாற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment