• நடிகை மேக்னா ராஜின் ஆதங்கம்!



    நடிகை என்றால் எல்லா வேடங்களிலும் தன்னை நிருபித்து காட்ட வேண்டும் என்று நடிகை மேக்னா ராஜ் கூறியுள்ளார்.


    மேக்னா ராஜ் சமீபத்தில் வெளியான ”குள்ளநரி கூட்டம்” படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்ச் சரத்குமாருடன் 'நரசிம்மன் ஐ.பி.எஸ்' படத்தில், ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில்,

    ”சரத்குமாருடன் நான் நடித்து வெளியாகயிருக்கும் 'நரசிம்மன் ஐ.பி.எஸ்' என்ற படம் மலையாளத்தில் 'அச்சண்டே ஆண் மக்கள்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சந்திரசேகர் இயக்குகிறார் மற்றும் ஜாசிகிப்ட் இசையமைக்கிறார். இதில் கோவை போலீஸ் ஆக சரத்குமார் நடிக்கிறார். அவருடைய 2 வயது குழந்தைக்கு தாயாக நான் நடிக்கிறேன். அது பற்றி என்னிடம் பலர் தாயாக நடிகிறீர்களே என்று கேட்கின்றனர். ஒரு நடிகை என்றால் எல்லா வேடத்திலும் சவாலாக தன்னை நிரூபித்து காட்ட வேண்டும். நான் 2 வயது குழந்தைக்குத் தான் தாயாக நடிக்கிறேனே, தவிர எந்த நடிகைக்கும் நான் தாயாக நடிக்கவில்லை. அப்படி நடிக்கவும் மாட்டேன். ஏனென்றால் நானே நடிகைதான். இதையடுத்து 'நந்தா நந்திதா' வெளியாக இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment