• விஷாலுடன் ஸ்ருதி ஹாசனா..? ஹன்ஸிகாவா..? – சுந்தர்.சி விளக்கம்


    சுந்தர்.சி டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படம் ஒன்றில் விஷால் கதாநாயகனாக, மூன்று வேடங்களில் நடிக்கிறார். பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதியிடம் பேச்சு வார்த்தை நட்த்தியதாகவும். அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.



    இது குறித்து படத்தின் இயக்குனர் சுந்தர்.சி கூறியதாவது:

    ”விஷால் ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசனுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நாங்கள் நடத்தவில்லை. விஷாலுடன் ஸ்ருதி நடிப்பதாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் விஷால் மூன்று வேடங்களில் நடித்தாலும், கதாநாயகி ஒருவர் தான் நடிக்கிறார். கதாநாயகியை தேர்வு செய்வதில் மும்முரமாக செயல்களில் ஈடுப்பட்டுவருகிறோம். கூடிய விரைவில் கதாநாயகி யார்...? என்பதை அறிவிப்பேன். மற்ற படி சொல்வதற்கு எதுவும் இல்லை” என்று கூறினார்.

    மேலும், ”வேலாயுதம்” படத்தில் ஹன்சிகாவின் சிறந்த நடிப்பை பார்த்து, விஷால் ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேசி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment