படத்திற்கு படம் தன் நடிப்பில் மெருகேறிவரும் நடிகர் ஜீவா, ஷங்கரின் இயக்கத்தில் உருவான “நண்பன்” படத்தில் விஜயின் நண்பனாக ஜீவா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இது ஜீவாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.
இதைதொடர்ந்து ஜீவா, இயக்குனர் மிஷ்கின் டைரக்ஷனில் முகமூடி படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா போன்ற படங்களை இயக்கியுள்ளார். முகமூடி படம் தன்னுடைய கனவு படம் என்று ஏற்கனவே பல பேட்டிகளில் சொல்லியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.
இப்படம் குழந்தைகளை கவரும் வகையில் ஹாலிவுட்டில் வெளியான பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போன்ற படங்கள் ரேஞ்சுக்கு எடுக்கப்படுகிறது. குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்திற்காக சென்னையை சேர்ந்த இரண்டு குழந்தைகள் அக்கா-தம்பியாக அழகாக நடித்துள்ளனர். மேலும், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து, மிக நேர்த்தியாக எடுத்து வருகிறார் மிஷ்கின்.
படத்தின் இசை சேர்ப்பு பணிக்காக இசையமைப்பாளர் கே மற்றும் மிஷ்கின் உள்ளிட்ட முகமூடி குழுவினர் செக்குடியரசு செல்கின்றனர்.

0 comments: