நடிகை அனன்யாவுக்கும், கேரள தொழில் அதிபர் ஆஞ்ச நேயனுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானதால், அனன்யாவின் பெற்றோர் ஆஞ்சநேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனன்யாவை வீட்டுக்காவலில் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.
தற்போது இதுகுறித்து அனன்யா கருத்து தெரிவிக்கையில், என்னை பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாதவை.
ஆஞ்சநேயன் திருமணமானவர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவர் என்னை ஏமாற்றவில்லை. நாங்கள் விரும்பிதான் திருமணம் செய்து கொள்ளவதற்கு முடிவெடுத்தோம்.
ஆஞ்சநேயன் தனக்கு திருமணம் நடந்தது பற்றியும், அது எவ்வாறு முறிந்தது என்பது பற்றியும் என்னிடம் விளக்கி கூறிவிட்டார்.
மேலும் அவருக்கு குழந்தைகள் இருப்பதாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்திகள் என்றும் தெரிவித்துள்ளார் அனன்யா.
இதன்மூலம் எங்கள் காதல் மேலும் வலுவடைந்து உள்ளது. எனது பெற்றோர் இத்திருமணத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
திருமணமானவராக இருந்தாலும் பரவாயில்லை. அவரை மணக்க தடையில்லை என்று பெற்றோர் என்னிடம் கூறிவிட்டனர்.
எங்கள் திருமண திகதியை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

0 comments: