ஹீரோயின் அழகை கேமராமேன் வைக்கும் கோணங்கள் மூலம் கெடுக்க முடியும் என்றார் ஒளிப்பதிவாளர். ‘அரவான்’ பட ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது
: ‘குங்குமபூவே கொஞ்சும் புறாவே’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் ‘அரவான்’ எனக்கு சவாலான படமாக அமைந்தது.
18ம் நூற்றாண்டு கதை. வறட்சி பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதற்காக காடுகளின் உட்புற பகுதிகளுக்கு சென்று படமாக்கினோம்.
இப்படத்தின் காட்சிகள் எந்த டோனில் (நிறம்) இருக்கவேண்டும் என்பதை இயக்குனர் வசந்தபாலன் என்னிடம் ஏற்கனவே கூறி இருந்தார். இதனால் அந்தந்த இடத்தில் எந்த டோனில் இடங்கள் காணப்பட்டதோ அதை அப்படியே படமாக்கினோம்.
ஆதி, பசுபதி உள்ளிட்ட எல்லா நடிகர்களும் கடின உழைப்பு தந்திருக்கிறார்கள். நான் உள்பட நடிகர், நடிகைகள் என எல்லோருமே அடிபடாத நாட்களே இல்லை.
‘ஹீரோயின்களை அழகாக காட்டுவது கேமராமேன் கையில் இருக்கிறதா?’ என்கிறார்கள். அது உண்மைதான். ஒவ்வொரு ஹீரோயினுக்கும் சில மைனஸ் இருக்கும்.
அந்த கோணத்தை பிரதானப்படுத்தி கோணங்கள் வைக்கும்போது அவர் அழகு தோற்றம் கெட்டுவிடும்.ஆனால் ஒளிப்பதிவாளர்கள் யாரும் அந்த எண்ணத்தில் கோணங்கள் வைப்பதில்லை. யாரடி நீ மோகினி படத்தை ஒளிபதிவு செய்தேன். நயன்தாரா போல அழகான ஒருவரை நான் இதுவரை பார்க்கவில்லை.
0 comments: