நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த வசுந்தரா தாஸ் தனது தோழரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சிட்டிசன் படத்தில் அஜீத்குமார் ஜோடியாக நடித்தவர் வசுந்தரா தாஸ். இவர் ஒரு சிறந்த பாடகி.
கமலுடன் ஹே ராம் படத்திலும் நடித்தார். இதையடுத்து லன்கேஷ் பத்ரிகே என்ற கன்னட படத்தில் நடித்தார்.
இதற்கிடையில் தனது தோழர் ரோபெர்டோ நாராயினுடன் இணைந்து பல்வேறு பாடல் ஆல்பங்கள் தயாரித்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் மங்களூரில் அருகில் கோடீஸ்வர் பீச் பகுதியில் உள்ள ரெட்டி கெஸ்ட் ஹவுசில் இவர்கள் திருமணம் ரகசியமாக நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கன்னட திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுபற்றி வசுந்தராதாஸ் கூறும் போது, நான் ரோபெர்ட்டோவுடன் அல்லது வேறு யாருடனோ தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்திருப்பது குறித்து யாரும் எதுவும் கூறத் தேவையில்லை.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடுவதை விரும்பவில்லை. ரோபெர்ட்டோவுக்கும், நானும் இணைந்து ஸ்டுடியோ, இசை குழு வைத்திக்கிறோம்.
அவருடன் எனக்கு தொழில்முறையில் நல்ல உறவிருக்கிறது. அவர் எனது பிசினஸ் கூட்டாளி. நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது மிகவும் வசதியாக உணர்கிறோம் என்றார்.

0 comments: