• திரைப்படத்தில் சொதப்புவது எப்படி..?



    முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற பெயரில் வெளியாகியுள்ள திரைப்படம் பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ளது. சண்டைக்காட்சிகள், பாடல் காட்சிகள் யாவும் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.


    ஆனால் திரைப்படத்தில் செய்யக்கூடாத பல தவறுகளை அந்தத் திரைப்படம் செய்து திரைப்படத்தில் சொதப்புவது எப்படியென்ற புகழை சம்பாதித்துள்ளது.

    மூன்று பொழுதுகளும் காணாமல் போன காதலி இருப்பதாக நினைத்து வாழ்கிறான் கதாநாயகன். அதற்குள் காதலியின் டபிள் அக்டிங் அமலா பால் கதைக்குள் நுழைகிறார்.

    ஒருவரே நினைவு கதாநாயகியாகவும், கனவு கதாநாயகியாகவும் இரட்டை வேடத்தில் வருவதால் நினைவெது கனவெது என்று தெரியாத பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

    திரைப்படத்தில் பிளாஸ் பாக்கில் மீண்டும் பிளாஸ்பாக் வைக்கக் கூடாது என்ற அடிப்படை விதியைக்கூட மீறிச் செல்கிறது திரைப்படம். ஒரு திரைப்படத்தை பெரும் பொருட் செலவில் எடுத்து சொதப்புவது எப்படி என்பதற்கு இப்படத்தை விட்டால் வேறு படங்கள் கிடைக்காது என்கிறார்கள் பலர்.

    அதேவேளை இதற்கு போட்டியாக காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் இந்த பெயரைக் கேட்டு ஓடிப் போகிறார்கள்.

    ஆனால் இரண்டு மணி நேரம் காதலில் சொதப்புவதை காட்டி ரசிகரை உஜாராக வைத்திருக்க முடியாது. இந்தப் படத்திற்கும் காதலில் சொதப்புவது எப்படி என்பதைவிட திரைப்படத்தில் சொதப்புவது எப்படியென்ற பெயரை வைத்திருக்கலாம் என்று படத்தை பார்த்த பெரிசு ஒன்று சென்னையில் புலம்பியபடி போனதாக எழுதப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment