• த்ரிஷாவை பின் தொடரும் சர்ச்சைகள்!



    தமிழ் சினிமா நடிகைகளில் சர்ச்சைக்கு பெயர் போனவர் த்ரிஷா. ஈசிஆரில் கொண்டாட்டம், சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் போன்ற சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன.
    இதை தொடர்ந்து த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதால் இளம் நடிகர்கள் நடிக்க மறுக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.

    இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா மிகுந்த வேதனையில் உள்ளார். இச்செய்தி குறித்து த்ரிஷா கூறியிருப்பதாவது :

    ”நடிகர், நடிகைளுக்கு வயது என்பது ஒரு பிரச்சனையே கிடையாது. வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா நடிகர்ளுடனும் நடித்துள்ளேன். ஐம்பது வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடித்ததால் என்னை கிழவியாக பார்க்கக் கூடாது என்று கொள்கிறேன். நடிகர், நடிகைகள் படத்தின் கதையும், கேரக்டரும் மட்டும் தான் கவனிக்க வேண்டும். இரண்டும் சிறப்பாக அமைந்தால் எந்த நடிகருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

    சீனியர்களுடன் நடிக்கும் நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது பிரமை, அதுமட்டுமல்லாமல் சினிமாவில் திறமைதான் முக்கியம். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்க கரீனாகபூர் வரை எல்லா நடிகைகளும் விரும்புகின்றனர். அது போன்ற கலாசாரம் தமிழ் திரையுலகிலும் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment