ஓய்வு நேரத்தில் பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் பாடல்களை கேட்பதை தன்னுடைய பொழுதுபோக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்துள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது கோச்சடையானில் நடித்து வருகிறார்.
தன்னுடைய ஓய்வுநேரத்தில் பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் பாடல்களை கேட்டு ரசிக்கிறார்.
இதற்காக, சந்திரபாபுவின் பாடல்களை சேகரித்து வைத்துள்ளார். “ஒண்ணுமே புரியல உலகத்துலே”, “சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது” போன்ற சந்திரபாபுவின் பாடல்கள் இன்றும் திரையுலக ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறது.
அந்தவகையில் சந்திரபாபுவின் பாடல்கள் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதிலும் இன்றும் நிலைத்து நிற்கிறது.
0 comments: