• பத்தாயிரம் கோடி படத்துக்கு மிரட்டல்


    பத்தாயிரம் கோடி படத்துக்கு மிரட்டல் வந்திருப்பதாக இயக்குனர் சீனிவாசன் சுந்தர் கூறியுள்ளார்.

    பத்தாயிரம் கோடி திரைப்படத்தில் நாயகனாக துருவ், நாயகியாக மடால்ஷா நடிக்க, நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் விவேக் நடிக்கிறார்.


    பத்தாயிரம் கோடி படத்தின் கதைக்கும் பரபரப்பாக பேசப்படும் 2G க்கும் சம்பந்தம் இருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியானது.


    மேலும் அரசியல் தரகர் பெண் கதாப்பாத்திரம் என்றவுடன் நீரா ராடியா வேடம் என்றும் தகவல் பரவியது. இதையடுத்து பத்தாயிரம் கோடி படத்தை எடுக்கக்கூடாது என்று மிரட்டல்கள் வந்ததாக இயக்குனர் சீனிவாசன் சுந்தர் தெரிவித்தார்.


    தற்போது இந்த மிரட்டல்களை தனது தந்தை முக்தா சீனிவாசனிடம் சொல்லி விட்டேன் என்றும் அவர் அதை சமாளிப்பார் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.


    மேலும் இது போன்ற மிரட்டல்களுக்கு இனி அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் இயக்குனர் சீனிவாசன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment