நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள காதல் கதையாக மனம் கொத்திப்பறவை உருவாகிறது என்று இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் மனம் கொத்திப்பறவை படத்தை எழில், அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதில் மெரீனா பட நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி ஆத்மியா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இளவரசு, சூரி, ரவிமரியா, தெய்வத்திருமகள் கிஷோர், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குனர் எழில் இயக்குகிறார்.
படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காரைக்கால் பகுதியில் "ஐய்யய்யோ வாடி புள்ள ஆளில்லை வீட்டுக்குள்ளே" என்ற பாடல் காட்சியில் சிவ கார்த்திகேயன், ஆத்மியா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
படப்பிடிப்பின் போதே இப்பாடல் மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததால் பாடலை மேலும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற உந்துதல் படக்குழுவினரிடம் ஏற்பட்டுள்ளது.
அதனால் பாடல் காட்சியை படமாக்க கடுமையாக உழைத்துள்ளோம் என்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள காதல் கதையாக மனம் கொத்திப்பறவை திரைப்படம் உருவாகிறது எனவும் இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார்.
0 comments: