• தயாரிப்பாளராகும் நடிகர் ஆர்யா

    நடிகர் ஜீவாவுடன் திரைப்படம் தயாரிக்கும் பணியில் நடிகர் ஆர்யா ஈடுபட்டு வருகிறார்.


    சென்னை பாண்டிபஜார், அண்ணாநகர், க்ரீம்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் சீஷெல்ஸ் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வருகிறார் நடிகர் ஆர்யா

    இவர் மிக விரைவில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து படத்தயாரிப்பில் களமிறங்கவுள்ளார்.
    இது குறித்து ஆர்யா கூறுகையில், நான் ஏற்கனவே படித்துறை என்ற திரைப்படத்தின் மூலம் படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாலும் நடிகர் ஜீவா மாதிரி ஒரு நல்ல நண்பனோடு இணையும் போது உற்சாகமாக உணர முடிகிறது.
    நாங்கள் தயாரிக்கவுள்ள திரைப்படத்திற்கு இரண்டு கதாநாயகனை கொண்ட கதையை இயக்குனர் ராஜேஷ் எழுதி வருகிறார்.
    அநேகமாக இத்திரைப்டத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment