
கொலிவுட்டில் சஞ்சனா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் நீங்காத எண்ணம் என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது.
நீங்காத எண்ணம் திரைப்படத்தில் மார்கழி 16 பட நாயகன் ஜெயந்த், நாயகி அங்கிதா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.முக்கிய வேடங்களில் ஜெயபிரகாஷ், சரண்யா, தலைவாசல் விஜய், டி.பி.கஜேந்திரன், காதல் தண்டபாணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.மோகனரங்கன் ஒளிப்பதிவு செய்ய கே.சங்கர் நீங்காத எண்ணம் திரைப்படத்தை தொகுத்து வழங்குகிறார். மேலும் கலை-மைக்கேல் சேகர், நடனம்-நவதீபன், தினேஷ், சண்டை பயிற்சி-ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் இதில் பணிபுரிகிறார்கள்.கவிஞர் நா.முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு இமானுவேல் சதீஷ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.எஸ்.எஸ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.தொடர்ந்து நாற்பது நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இளமை பருவத்தில் எதை விதைக்கிறோமோ அதுதான் முதுமைப்பருவத்தில் கூட நிலைத்து நிற்கும்.விட்டுக் கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போனதாக சரித்திரம் இல்லை, காதல் புனிதமானது, சந்தோசமானது இல்லை என்பன போன்ற புதுமையான கருத்துக்களை படத்தில் சொல்லியிருக்கிறோம் என்று இயக்குனர் எம்.எஸ்.எஸ். கூறியுள்ளார்
0 comments: