• அறிமுக நடிகர்களின் நடிப்பில் உருவான பாரி திரைப்படம்


    கொலிவுட்டில் புதுமுகங்கள் அறிமுகமாகும் பாரி திரைப்படத்தை தனிஷா இன்டெர்நேஷனல் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
    கொலிவுட்டில் புதுமுக நாயகன் ராகுல் மற்றும் புதுமுக நாயகி பீனா இருவரும் பாரி திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.இவர்களுடன் சக்திவேல், பாஸ்கர், சரஸ்வதி, தாந்தருவி, பிரபாகரன், தமிழ், சுரேஷ், ஷங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.பாரி திரைப்படத்தில் ராகுலும் பீனாவும் காதலிக்கிறார்கள். நாயகனின் அப்பாவே காதலுக்கு வில்லனாக முளைக்கிறார். ஆட்களை வைத்து மகனின் காதலியை தீர்த்துக்கட்டுகிறார்.அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை இயக்குனர் ரஜினி உருக்கமாக சொல்லியிருக்கிறார். பாரி திரைப்படத்திற்கு ரொபின் சாமுவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.அருள் தேவ் இசையமைக்க, ராகவன் படத்தை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் நடனம்-ரேவதி நேஷ், சண்டை பயிற்சி-ஷிவா, கலை-மயில் கிருஷ் மற்றும் பலர் இதில் பணியாற்றியுள்ளார்கள்.பாரி திரைப்படத்தை எஸ்.முத்து தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரஜினி இயக்கியுள்ளார்.

0 comments:

Post a Comment